Vijay 64 Karnataka Theaterical Rights
தளபதி 64 படத்தின் ரிலீஸ் உரிமையை தற்போதே பிரபல நிறுவனம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களில் ஒருவர் தளபதி விஜய். வசூல் சக்கரவர்த்தியான இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகின்றன. இந்த படத்தை விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் இல்லை. கர்நாடகாவில் தான் வியாபாரம் முடிந்துள்ளது.

கர்நாடகாவில் முன்னணி நிறுவனமான Dheeraj Enterprises என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.