தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறியுள்ளார்.

Dharshana Sri Paul Quits From TS Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும்.

நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வசுந்தராவிற்கு சரஸ்வதி செய்த உதவியால் எந்த சிக்கலும் இல்லாமல் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷனா ஸ்ரீ பால் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு ஆதித்யா சேனலில் பணியாற்றி பிரபலமான இவர் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வந்த நிலையில் பட வாய்ப்பு காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

வசுவுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் குழந்தையுடன் வீட்டுக்கு வரும்போது புதிய வசுந்தரா யார் என்பது தெரியவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.