Dharshan in Shankar direction

இயக்குனர் ஷங்கர் படத்தில் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dharshan in Shankar direction : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் ஷங்கர். இவர் “எஸ் பிக்சர்ஸ்”என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மேலும் இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, காதலன், இந்தியன், எந்திரன், நண்பன், 2.o,போன்ற பிரம்மாண்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷன்.

தற்போது இயக்குனர் ஷங்கர் தர்ஷனை ஹீரோவாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியான “ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்”என்ற படத்தின் ரீமேக்கில் வயதான கதாபாத்திரத்தில் ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும், மகனாக தர்ஷன் நடிக்கப் போவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் திரைப்படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு குறை இருக்காது. எனவே இந்த திரைப்படத்தை குறித்து ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்புகளும் அதிகமாகியிருக்கிறது.