தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Dharsha Gupta latest photo viral:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா‌. இந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிய இவர் அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் பேக் போஸில் கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இவரது இந்த அசத்தலான புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.