Dharma Prabhu Movie Review : Claps And Bulbs Of Dharma Prabhu.! | Dharma Prabhu Movie Review | Yogi Babu | Ramesh Thilak | Radha Ravi | Rekha
எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதா ரவி, ரமேஷ் திலக், ரேகா, ஜனனி ஐயர் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்ம பிரபு.

Dharma Prabhu Movie Review : 

படத்தின் கதைக்களம் :

எமதர்ம ராஜாவான ராதா ரவி தன்னுடைய வயது முதிர்ச்சியால் எம தர்ம பதவியை யோகி பாபுவுக்கு கொடுத்துகிறார். யோகி பாபு எம தர்மனாக ஆனது பிடிக்காமல் சித்திர குப்தரான ரமேஷ் திலக் எம தர்ம பதிவுக்கு ஆசைப்பட்டு சில சூழ்ச்சிகளை செய்கிறார்.

இந்த சூழ்ச்சியில் சிக்கிய எமதர்ம யோகி பாபு தன் வேலை உயிரை எடுப்பது என்பதை மறந்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றி விடுகிறார். இதனால் இந்த மண்ணுலகில் பல பாவங்களை செய்து வரும் ஒரு மனிதரும் காப்பாற்றப்பட்டு விடுகிறார்.

இதனால் ஆவேசமான சிவ பெருமான் இன்னும் ஒரு வாரத்திற்குள் அந்த கொடூரனை கொன்றாக வேண்டும், இல்லையேல் உங்கள் எல்லாரையும் அழித்து விடுவேன் என கூறி விடுகிறார்.

அதன் பின்னர் என்ன நடக்கிறது? யோகி பாபு அந்த கொடூரனை கொண்டாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

யோகி பாபுவும், ரமேஷ் திலக்கும் செய்யும் நகைச்சுவை அமர்க்களம் தான் இந்த படம். முதல் 15 நிமிடம் வரை மொக்க காமெடியால் நம்மை சிரிக்க வைக்க முயல்கின்றனர், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.

அதன் பின்னர் இருவரும் ஸ்கோர் செய்ய தொடங்கி விட தியேட்டர்களில் சிரிப்பலைக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

ராதா ரவி, ரேகா, ஜனனி ஐயர் ஆகியோரெல்லாம் சும்மா ஒரு சிறிய கதாபத்திரமாக இருந்து விட்டு சென்று விடுகிறார்கள்.

தொழில்நுட்பம் :

இசை :

ஐன்ஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு, ஆனால் பெரியதாக பாடல்கள் எதுவும் இல்லை. அவை நம் மனதை கவரவும் இல்லை.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

மகேஷ் முத்து ஸ்வாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு தகுந்தாற் போல அமைந்துள்ளது. சான் லோகேஷின் எடிட்டிங்கும் அற்புதம்

இயக்கம் :

முத்துகுமரன் இந்த படத்தை முழு நீள காமெடி படமாக கொடுத்துள்ளார். முதல் 15 நிமிடம் வரை காமெடி டிராக்கை பிடிக்க முடியாமல் தடுமாறினாலும் அதன் பின்னர் சரியாக கேட்ச் செய்து கொண்டு சென்றுள்ளார்.

அநியாயமாக கொலை செய்யப்படுபவர்கள், இறந்து விடுபவர்களுக்கு எமதர்ம ராஜா யோகி பாபு கொடுக்கும் 1+1 ஆப்பர் சூப்பரோ சூப்பர். ஆனால் இதெல்லாம் கற்பனைக்கு மட்டும் தான் சரி வரும்.

முதலில் போற போக்கில் அரசியல் வாதிகளை கலாய்த்து வந்த இவர்கள் இடைவெளிக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சாதி ரீதியிலான அரசியல் கட்சியை கிழி கிழி என கிழித்தெடுத்து விட்டார் இயக்குனர்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் காமெடி
2. யோகி பாபு, ரமேஷ் திலக்கின் நடிப்பு
3. படத்தின் செட் அமைப்பு
4. விவசாயம், விவசாயத்தை பற்றிய டைலாக்

தம்ப்ஸ் டவுன் :

1. பல இடங்களில் லாஜிக் மீறிய காட்சிகள்
2. கற்பனைக்கு மட்டுமே ஒத்து வரும் காட்சி அமைப்புகள்

மொத்தத்தில் தர்ம பிரபு சிரிப்பதற்காக மட்டும் ஓரிரு முறை பார்க்கலாம்.

REVIEW OVERVIEW
தர்ம பிரபு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
dharma-prabhu-movie-reviewமொத்தத்தில் தர்ம பிரபு சிரிப்பதற்காக மட்டும் ஓரிரு முறை பார்க்கலாம்.