Dhanush43 Shooting Update

தனுஷ் 43 படப்பிடிப்பை தொடங்குவது எப்போது என முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

Dhanush43 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள தனுஷ் 43 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேலு மாஸ்டர் மகேந்திரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பை மிக விரைவில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்காவிற்குச் சென்று உள்ள தனுஷ் அங்கிருந்து தமிழகம் திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.