விவாகரத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

விவாகரத்துக்குப் பிறகு நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

Dhanush With Sons After Divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்ட இவர் 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.

அச்சு அசலாக அப்படியே தனுஷ் போலவே இருக்கும் மூத்த மகன்.. விவாகரத்துக்குப் பிறகு மகன்களுடன் பங்கேற்ற நிகழ்ச்சி - வைரல் போட்டோ.!!

இவர்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் இதுவரை அதில் உறுதியாக இருந்து வருவது மட்டுமல்லாமல் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் ராக் வித் ராஜா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் அவருடைய இரண்டு மகன்களும் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அச்சு அசலாக அப்படியே தனுஷ் போலவே இருக்கும் மூத்த மகன்.. விவாகரத்துக்குப் பிறகு மகன்களுடன் பங்கேற்ற நிகழ்ச்சி - வைரல் போட்டோ.!!

தனுஷின் மூத்த மகன் அச்சு அசலாக அப்படியே பார்ப்பதற்கு தனுஷ் போலவே இருக்கிறார் என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.