Dhanush With Kolisoda

அமெரிக்காவின் ஸ்டைல் ஆக கெட்டப்பில் தனது கையில் நம்ம நாட்டு கோலி சோடாவை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Dhanush With Kolisoda : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார்.

கர்ணன் படத்தை முடித்த கையோடு தனுஷ் அமெரிக்கா சென்று அவருடைய ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தனுஷ் ஸ்டைலான கேட்டபின் கையில் நம்ம நாட்டு கோலி சோடாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.