Dhanush With Her Sons
Dhanush With Her Sons

அப்பாவின் ட்ரஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் தனுஷின் மகன்.

Dhanush With Her Sons : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களில் தற்போது கிடுகிடுவென வளர்ந்து வருகின்றனர்.

மூத்த மகனான யாத்திரா தன்னுடைய அப்பாவான தனுஷின் டீ சர்ட்டை அணிந்து கொண்டுள்ளார்.

தன் டி-ஷர்ட்டை அணிந்துள்ள மகனுடன் மொட்டை மாடியில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் தனுஷ்.

படம் பார்த்து அப்செட் ஆன தனுஷ்.. இறுதியில் தனுஷ் 43 இயக்குனரையே மாற்றி விட்டார் – வெளிவந்த ஷாக்கிங் தகவல்கள்!

இந்த புகைப்படங்களை தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கோமாளி பட இயக்குனர் பிரதிப் ரங்கராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.