மெய்யழகன் பட குழுவிற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும், 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
மேலும் கார்த்தி,ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன், தேவதர்ஷினி, சுவாதி கொண்டே, கருணாகரன், இளவரசு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனுஷ் இந்த பட குழுவிற்கு பிளாக்பஸ்டர் சக்சஸ் கொடுக்கும் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்துள்ளார். இவர் அணிந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.