Dhanush vs Vijay films clash : Asuran | Thalapathy 63 | Vijay | Nayanthara | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Dhanush vs Vijay films clash :

இதற்கு முன்னரே விஜய்யுடன் பல முறை மோதியுள்ள தனுஷ் மீண்டும் இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

மிஸ்டர் லோக்கல் தோல்வியால் கதையை மாற்றிய சிவகார்த்திகேயன் – பரிதாபமான நிலை!

அதற்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 15ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

படப்பிடிப்பு முடிந்தாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிகம் இருப்பதால் இப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறதாம் படக்குழு.

அதே நாளில் விஜய்யின் தளபதி 63 படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது இதற்கு முன்னரே விஜய்யுடன் பல முறை மோதியுள்ள தனுஷ் மீண்டும் இதை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.