Pattasu and hero
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் sk-ன் நம்ம வீட்டு பிள்ளை படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில், இருவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.

தனுஷ் நடித்த 3 படத்தின் நகைச்சுவை நடிகராக வந்த சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் படத்தை தயாரித்தார் தனுஷ். அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் த‌மி‌ழ் சினிமாவில் ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படவே அவர்களுக்குள் பேச்சு வார்த்தை இல்லமால் இருக்கிறது.

இதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக களமிறங்கினார். இவர் தயாரித்த கனா படம் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியானது.

இதனை தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் தனுஷ் நடிக்கின்ற பட்டாசு மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இ‌ந்த இருவரின் படங்கள் முதல் முறையாக ஒரே நேரத்தில் மோதி கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.