நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷின் வாத்தி… புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரல்!.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

தனுஷின் வாத்தி… புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வைரல்!.

இவரது இசையில் ‘வா வாத்தி’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்புடன் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக இருப்பதாக புதிய தகவலை போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.