நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அனல் பறக்கும் தனுஷின் வாத்தி பட போஸ்டர்!!… தீபாவளி சிறப்பு ஸ்பெஷல் ரசிகர்கள் உற்சாகம்!.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி”திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் இப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் வெளியீட்டு தேதி தள்ளி போகும் என்று கூறப்படுகிறது.

அனல் பறக்கும் தனுஷின் வாத்தி பட போஸ்டர்!!… தீபாவளி சிறப்பு ஸ்பெஷல் ரசிகர்கள் உற்சாகம்!.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாத்தி திரைப்படத்தின் படக்குழு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தனுஷ் ரசிகர்கள் அப்போஸ்டரை இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறது.