நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். கல்வியை மையப்படுத்தி ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காண இருக்கும் இப்படம் திரைக்கு வர சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷன் பணிகளை தற்போது படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி இப்படத்தை வழங்க இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாத்தி திரைப்படத்தின் பேனர்களை திரையரங்குகளில் வைக்கும் வீடியோவை பகிர்ந்து பிரமோஷனை தொடங்கியுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.