நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு முன்பு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார்.

தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தை சித்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் நரேன், சமுத்திரகனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தனுஷ் ரசிகர்களால் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் #Vaathi என ஹேஷ்டேக்குடன் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.

இதோ அந்த வீடியோஸ்