நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் குறித்த புதிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்துக்கொண்டு முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படமும் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு மித்ரன் இயக்கத்தில் எதார்த்தமான கதைகளத்துடன் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாடல் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனிருத் இசையமைத்திருந்தார். இவர்களது காம்போவில் உருவாகி இருந்த இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருந்த மேகம் கருக்காதா பாடல் spotify இணையதளத்தில் 200 மில்லியனுக்கு மேல் ஹிட் அடித்து ஸ்ட்ரீமிங்காகி வருவதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.