Dhanush 44 Director
தனுஷ், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க போவது யார் என்பது பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

தனுஷே இப்படத்தை இயக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தை இயக்க போவது தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களையும் உத்தமபுத்திரன் படத்தையும் இயக்கிய ஜவகர் மித்ரன் தான் என கூறப்படுகிறது.

இயக்கம் மட்டுமே ஜவகர் கவனிக்க இருப்பதாகவும் கதை, திரைக்கதை தனுஷுடையது தான் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.