44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டு செஸ் வீரர்கள் தனுஷின் பட்டாசு படத்தின் ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கி வைத்தார். இப்போட்டியை இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இப்போட்டியில் ஐந்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து வருகிறது. இப்போட்டியை தமிழக அரசு பிரம்மாண்டமாக நடத்தி வருவதால் மக்கள் மத்தியில் செஸ் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் வீரர்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், தமிழக அரசு ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதில் கரகாட்டம், பறை இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த வெளிநாட்டு வீரர்கள் அவர்களுடன் நடனமாடியும் மகிழ்ந்தனர். மேலும் முக்கியமாக தனுஷின் பட்டாசு படத்தின் “சில் ப்ரோ” பாடலுக்கு செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வெளிநாட்டு வீரர்கள் “வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்” என்று சூப்பராக குத்தாட்டம் போட்டு மகிழ்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.