நடிகர் தனுஷ் எட்டாம் வகுப்பு வரை குக் வித் கோமாளி பிரபலத்துடன் இணைந்து படித்ததாக தெரிவித்துள்ளார்.

Dhanush School Friend in Cook With Comali : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் வழியாகவும் கர்ணன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் நானும் பாபா பாஸ்கரும் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

தனுஷின் எட்டாம் வகுப்பு வரை கூடவே படித்த குக் வித் கோமாளி பிரபலம் - இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.!!

தனுஷ் பாபா பாஸ்கர் உடன் இணைந்து படித்தவர் என வெளிப்படையாக கூறியது ரசிகர்களிடையே செம வைரல் ஆகியுள்ளது. தனுஷ், பாபா பாஸ்கர் ஆகியோர் இணைந்து படிக்காதவன், மாரி, கொடி ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது தொடர்ந்து தற்போது கர்ணன் படத்திலும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் எட்டாம் வகுப்பு வரை கூடவே படித்த குக் வித் கோமாளி பிரபலம் - இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.!!