தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தனுஷ் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

Dhanush Salary for Sekhar Kammula Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பு இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது.

தெலுங்கு படத்தில் நடிகர் தனுஷ்.. இந்தப் படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா??

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாக்க உள்ளன.

71 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகிறது : சுகாதாரத்துறை தகவல்

இந்த நிலையில் நடிகர் தனுஷ் படைத்ததாக தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது.

LIFT Movie First Review | Tamil | Ravinder Chandrasekar | Kavin | Amirtha | Libra Production | News

இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் அவர்களுக்கு ரூபாய் 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே அவர் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருந்த நிலையில் அந்த கால்ஷூட்டுகளை இப்படத்திற்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.