இளமை திரும்புதே என மாமனாரின் பாடலைப்பாடி மனைவியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார் தனுஷ். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhanush Romance With Wife : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். கர்ணன் திரைப்படத்தில் நடித்த இவர் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

குடும்பத்துடன் அமெரிக்கா பறந்த தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இளமை திரும்புதே.. மனைவியுடன் பாட்டுப்பாடி ரொமான்ஸ் செய்த தனுஷ் - தீயாக பரவும் வீடியோ.!!

மேலும் ஏற்கனவே ஒருமுறை தனுஷ் தன்னுடைய மனைவியை வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மாமனார் ரஜினிகாந்தின் பேட்டை திரைப்படத்தில் இடம்பெறும் இளமை திரும்புதே என்ற பாடலை பாடு மனைவியுடன் ரொமான்ஸ் செய்துள்ளார் தனுஷ். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.