தனுஷ் 43 படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

Dhanush Role in D43 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தின் வழியாக வெளியாக உள்ளது.

முதல் முறையாக மிரட்டலான கதாபாத்திரத்தில் தனுஷ் - D43 படம் பற்றிய சூப்பர் தகவல்கள் வெளியிட்ட இயக்குனர்.!!

இத்திரைப்படத்தை தமிழில் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து பத்து திரைப் படங்கள் வெளியாக உள்ளன. அதில் ஒன்றுதான் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் விசாரணை பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது கமர்ஷியலான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.