Dhanush Remake

Dhanush Remake : தன் கணவர் நாக சைதன்யாவுடன் சமந்தா நடித்த மஜிலி படம் அண்மையில் தெலுங்கில் திரைக்கு வந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் ஒரே வாரத்தில் 50 கோடி வரை வசூல் செய்து அசத்தியுள்ளது. இத்தனைக்கும் இப்படம் சுமாரான விமர்சனம் தான் பெற்றது.

எனினும் நாக சைதன்யா – சமந்தா ஜோடிக்காக படம் வசூலில் அசத்தி வருகிறது. மேலும் நீண்ட காலமாக ஒரு நிலையான வெற்றிக்காக போராடி வந்த நாக சைதன்யாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Body Builder ஆகும் சமந்தா – முதல் முறையாக வெளியான சிக்ஸ் பேக் புகைப்படம்.!

இந்நிலையில் இப்படத்தை நடிகர் தனுஷ் தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இதில் தனுஷ் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்பது சஸ்பென்ஸ். ஒருவேளை தனுஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்தால் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.