Dhanush Parents Favourite Movies

தனுஷ் நடித்த படங்களில் அவருடைய பெற்றோருக்கு பிடித்த படம் எது என்பதை அவர்களே பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.

Dhanush Parents Favourite Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இவர் தமிழ் திரையுலகில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதனை அவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கி இருந்தார்.

தனுஷின் பெற்றோர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என கூறியுள்ளனர்.

அதாவது அவரது தாயார் காதல் கொண்டேன் படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறினார். தனுஷ் எனக்கு நடிப்பு வராது நாள் போய்டுறேன் என கூறி இந்த படத்தில் நடித்தார். அவருடைய நடிப்பு சூப்பராக இருந்தது என்று கூறியுள்ளார்.

அதே போல் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அளித்த பேட்டியில் மயக்கம் என்ன என்ற படம் தான் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே செல்வராகவன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.