Dhanush Next Movies

Dhanush Next Movies : தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்க இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

ஆனால் வெற்றிமாறன் அந்த படத்தின் திரைக்கதையை வலுவாக உருவாக்க சில காலம் அவகாசம் கேட்டிருப்பதாகவும் இதனால் அந்த படம் தொடங்குவதற்கும் வேறு படங்களில் நடித்து விடலாம் என தனுஷ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் ஒரு படத்தை கொடி படத்தின் இயக்குனரான ஆர்.எஸ் துரை செந்தில் இயக்க உள்ளார். மற்றொரு படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்க உள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருந்தன.

தற்போது இந்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் உறுதி செய்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தல அஜித்தை போலவே தனுஷ் தொடர்ச்சியாக இரண்டு படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.