Dhanush Next Movie

Dhanush Next Movie : வடசென்னை படத்தை அடுத்து தனுஷின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது மாரி-2 படத்தில் நடித்து வருகிறார். எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

மேலும் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்காக மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் தன்னுடைய அடுத்த படத்திற்காக ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் தனுஷ் இதுவரை இல்லாத தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் ஃபேண்டஸி காமெடி படமாக இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இவர்களின் கூட்டணி உறுதியானால் நிச்சயம் இந்த படம் ஹிட் அடிக்கும் எனவும் நம்பலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.