Dhanush Next Movie Director Update
Dhanush Next Movie Director Update

தனுஷின் அடுத்த படம் பற்றிய மிரட்டலான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Dhanush Next Movie Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

மேலும் தனுஷ் நடிப்பில் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படமும் உருவாக்கியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாள் விருந்தாக நேற்று வெளியாகி இருந்தது.

உடல் எடையை குறைத்து ஒல்லியான ரம்யா.. புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் – லாக் டவுனுக்கு பின்னாடி எப்படியாகிட்டார் பாருங்க

வாடி வாசல் திரைப்படம் அதிகமான கூட்டத்துடன் உருவாக்க வேண்டிய திரைப்படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே வெற்றிமாறன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துவிட திட்டமிட்டுள்ளார். இது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமா? என்ற கேள்வி எழுந்தது, ஆனால் இது வடசென்னை 2 இல்லை எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது இப்படத்தின் pre-production வேலைகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாக் டவுன் முடிந்துபடப்பிடிப்புகள் தொடங்கியது இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.