Dhanush
தனுஷின் அடுத்த படம் பற்றிய ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு பட்டாஸ் படத்தின் அறிவிப்பு வெளியான போதே வந்து விட்டது.

தற்போது இந்த படத்தை யார் இயக்க போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. ஆம் அடங்க மறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Karthick Thangavel

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.