Dhanush Next Direction Movie
Dhanush Next Direction Movie

தனுஷ் இயக்கப்படும் சரித்திர படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Dhanush Next Direction Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பாடகராகவும் வலம் வருபவர் தனுஷ்.

அதுமட்டுமல்லாமல் இவர் பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநரகவும் தடம் பதித்து வெற்றி கண்டார்.

கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா? கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க தனுஷ் ரசிகர்களே!

இந்தப் படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் அந்நிறுவனம் நிதி பற்றாக்குறையால் அப்படத்தை கைவிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது‌. ஆனால் தற்போது இதனை தனுஷ் இயக்கவில்லை. திரைக்கதையை மட்டுமே அமைக்க உள்ளார்.

மேலும் தனுஷ் சரித்திர படம் ஒன்றை கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த படத்திற்கு நான் ருத்ரன் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ் ஜே சூர்யா, அதிதி ராவ் மற்றும் பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

துருவ நட்சத்திரம் என்ன ஆச்சு ரசிகர்களின் கேள்விக்கு கௌதம் மேனன் கொடுத்த பதில்!

அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இப்படத்தின் வேலைகள் மற்றும் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தை தயாரிக்கப் போவது யார்? இசை அமைக்கப்போவது யார்? என்பதையெல்லாம் சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.