நடிகர் தனுஷின் பிறந்தநாள் விருதாக ரசிகர்களுக்கு “வாத்தி” பட குழு சூப்பர் தகவலை வெளியிட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தனுஷ் பிறந்தநாள் விருந்தாக 'வாத்தி' படகுழு அறிவித்த சூப்பர் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

மேலும் பிரபல தயாரிப்பாளரான நாகவம்சி தயாரிக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்த சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் பிறந்தநாள் விருந்தாக 'வாத்தி' படகுழு அறிவித்த சூப்பர் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

அதாவது வருகிற 28-ஆம் தேதி தனுஷ் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வாத்தி படகுழு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 27-ஆம் தேதியும், டீசர் 28-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்ற சூப்பர் தகவலை போஸ்டர் மூலம் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு போஸ்டர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.