தனுஷ் தற்போது நடிக்க உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் புதிய போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதனை நடிகர் தனுஷ் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ரிலீசுக்கு தயாராகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது நடிக்க தயாராகி இருக்கும் படம் தான் “கேப்டன் மில்லர்”. இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க போகும் இப்படத்திற்கு சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் சமீபத்தில் வரலாற்று பாணியில் உருவாக இருக்கும் இப்படத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் அதில் அவர்கள் “கேப்டன் மில்லர்” விரைவில் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை பார்த்த நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் Just WoW என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.