Dhanush Movie Title Issue | TamilCinema | Kollywood | Opposition to the title of Dhanush's upcomeming movie. Karthick supuraj.
தனுஷ் படத்தில் வைக்கப்பட்ட தலைப்பிற்கு எழும் எதிர்ப்பு குழப்பத்தில் படக்குழு.

Dhanush Movie Title Issue : அசுரன் படத்தில் நடித்து முடித்து தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷ் அவர்களுக்கு வில்லனாக ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிக்க உள்ளார். இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் பெரிய அளவில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், படத்திற்கு “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற பெயரை வைக்க உள்ளதாக தகவல் வரவே அதனை சிலர் எதிர்த்து உள்ளனர்.

வெளியான 1 மணி நேரத்தில் அசுரன் ட்ரைலர் படைத்த சாதனை.!

இதனை பற்றி தயாரிப்பாளர் சாய் நாக ராஜன் அவர்கள், எம்.ஜி.ஆர். அவரகள் நடிப்பில் வெளியான “உலகை சுற்றும் வாலிபன்” படத்தை டிஜிட்டல் முறையில் உருவாக்கி வருகிறோம்.

அதற்கான உரிமமும் என்னிடம் உள்ளது. மேலும், இதனை விரைவில் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இந்த நிலையில் தலைப்பை யாரிடமும் தரமுடியாது என்று தெரிவித்து உள்ளார்.

இதனால், தனுஷ் படத்தின் பெயரில் சிக்கல் தொடங்கி உள்ளது. வேறு பெயர் வைக்கப்படுமா ? இல்லை தயாரிப்பாளரை சமாதானம் செய்து அதே தலைப்பை வைப்பார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here