நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “தாய்க்கிழவி” மற்றும் “மேகம் கருக்குதா” போன்ற இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்திற்கான மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ‘லைப் ஆஃப் பழம்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.