தனுஷ் படத்தின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான போஸ்டர் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்ட டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலுக்கான போஸ்டரை பட குழு வெளியிட்டு இருந்தது. அது தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய தனுஷ் படத்தின் போஸ்டர் - கோபத்தில் ரசிகர்கள்.!

அதாவது இப்படத்தின் போஸ்டர் பார்க்க முன்னணி நடிகர் துல்கர் சல்மானின் ‘ஹே சின்னாமிகா’ படத்தின் போஸ்டரை போலவே உள்ளது. அதனால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். மேலும் அந்த இரண்டு போஸ்டர்களையும் ஒன்றாக வைத்து ரசிகர்கள் அதனை விமர்சித்து வருவதோடு இணையத்தில் வைரலாக்கியம் வருகின்றனர்.