Dhanush Heroine

Dhanush Movie : 13 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்னேகா தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து கொடி படத்தை இயக்கி இருந்த துரை செந்தில் குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார்.

ரஜினியால் மீண்டும் தடைபட்ட தனுஷ், கார்த்தி சுப்புராஜ் படம்? – அதிர்ச்சி தகவல்.!

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்னேகா நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன, ஆனால் ஸ்னேகா அப்பா தனுஷுக்கு தான் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

அதாவது தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளாராம். அதில் அப்பாவாக நடிக்க உள்ள தனுஷுக்கு தான் ஸ்னேகா ஜோடியாக உள்ளார்.

மேலும் மற்றொரு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், ஸ்னேகா ஆகியோர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியிருந்த புதுப்பேட்டை படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த ஜோடி தற்போது 13 வருடங்களுக்கு பிறகு இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.