தனுஷின் “திருச்சிற்றம்பலம்” படத்திலிருந்து நேற்றைய தினம் தாய்க்கிழவி என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்” இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் அவர்கள்  நடித்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற மூன்று படங்களுமே ரசிகர்களிடையே தனுஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும்  இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின்  படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம்ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் முதல்பாடலான “தாய் கிழவி” என்ற பாடல்  ஜூன் 24 ஆம் தேதியில் வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இப்படத்தின் முதல் பாடலான ‘தாய்க்கிழவி’  என்ற கிராமத்து பாணியிலிருக்கும் இந்தப் பாடல் அனிருத் இசையில் தனுஷ் குறளில் ஜூன் 24 ஆம் தேதியான நேற்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். மேலும்7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணி உருவாகியிருக்கும் இப்பாடலின் மூலம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே அதிகரித்துள்ளது.

YouTube video