Dhanush Movie Announcement Trolls
Dhanush Movie Announcement Trolls

தனுஷின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனரின் பெயரில் போலி கணக்கில் பதிவு ஒன்று பதிவாகியுள்ளது.

Dhanush Movie Announcement Trolls : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான மாரி மற்றும் மாரி 2 படங்களை இயக்கி இருந்தவர் பாலாஜி மோகன்.

தற்போது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜி தனுஷ் என்ற பெயரில் தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனுஷின் அடுத்த படம் அறிவிப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் OTT வழியில் ரிலீஸா?? – ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட தகவல்

ஆனால் இது போலி கணக்கிலிருந்து பதிவான பதிவு. இதனை ரசிகர்கள் கூட கண்டுபிடித்து விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குனருமான மனோபாலா ஃபேக் ஐடி-யின் பதிவு என்று கூட தெரியாமல் இந்த பதிவிற்கு லைக் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சார் அது ஃபேக் ஐடி என அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/directorbalajim/status/1278262481425580032?s=19