Dhanush Movie

Dhanush Movie : ரஜினியால் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் மர்றும் தனுஷ் படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இறைவி படத்திற்கு பிறகு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.

விஜய் 63 மீண்டும் இணைந்த மேஜிக் கூட்டணி, ஆனால்? – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

அதில் இருந்து மீண்டு வருவாரா? வரமாட்டாரா? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்க தனுஷை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிரபு தேவாவின் மெர்குரி, ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்களால் இந்த படங்கள் அப்படியே பேச்சு வார்த்தையுடன் நின்று விட்டது.

இதனையடுத்து தற்போது தனுஷ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜிற்கு கால்ஷீட் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

முருகதாஸ் இயக்கும் படத்தை அடுத்து மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதால் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படம் என்னதான் ஆகும்? எப்போது தொடங்கும் என தெரியாமல் தனுஷ் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.