விஜய் தொடர்ந்து தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கிறார் நடிகர் தனுஷ்.

Dhanush Join With Telungu Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்கள் உருவாக உள்ளது. இந்த நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜயை தொடர்ந்து தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் தனுஷ் - வெளியான அதிரடி தகவல்

அதாவது தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்மலு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் அவர்களும் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில் தனுஷூம் அடுத்து தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.