Dhanush in Upcoming Movies
Dhanush in Upcoming Movies

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

Dhanush in Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், டேன்ஸராகவும், பாடகராகவும் வெற்றி பெற்றவர்.

இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.

விஜய், த்ரிஷா நடித்திருந்த குருவி படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது தெரியுமா? – வெளியான பல நாள் ரகசியம்!

ஜகம் சுகமானது ஜகமே தந்திரம் என்று பதிவிட்டிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அதாவது ஊரடங்கு உத்தரவுகள் முடிந்ததும் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பியதும் இந்த படம் ரிலீசாகும் என கூறியிருந்தார்.

இந்த படம் மட்டுமல்லாமல் பரியேறும்பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் இந்த நான்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்பதால் ரசிகர்கள் இப்படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.