நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிகை பிரியங்கா மோகன் அவர்களோடு இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush in Next Movie Heroine : நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளோடு தமிழ் சினிமாவில் மாஸான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது வரிசையாக நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருவரின் காம்போவில் சமீபத்தில் வெளியான சாணி காயிதம் என்ற படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அவர்கள் அடுத்ததாக இயக்க இருக்கும் “கேப்டன் மில்லர்” என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.