ஜெயலலிதா தாலி எடுத்து கொடுக்க கோலாகலமாக நடைபெற்று உள்ளது நடிகர் தனுஷின் திருமணம்.

Dhanush in Marriage Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு சமந்தாவுடன் நெருக்கம் தான் காரணம் என ஒருபக்கம் சொல்லப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் கடலில் தத்தளித்து வரும் தனுஷிற்கு ரஜினி எந்தவித உதவியும் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் இருவரின் விவாகரத்திற்கு உண்மையான காரணம் என்ன தான் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். இப்படியான நேரத்தில் தனுஷின் திருமண புகைப்படங்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தாலியை எடுத்துக்கொடுக்க இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 18 வருடங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த இவர்கள் திருமண வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.