Dhanush in Last 5 Movies Collection
Dhanush in Last 5 Movies Collection

நடிகர் தனுஷின் கடைசி ஐந்து படங்களின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Dhanush in Last 5 Movies Collection : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக தன்னுடைய அண்ணா செல்வராகவன் இயக்கத்தில் திரையுலகில் அறிமுகமானார்.

நடிகனாக வேண்டும் பெரிய ஹீரோவாக வேண்டும் என எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமான தனுஷ் இன்று தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை படங்களில் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான 5 திரைப்படங்கள் என்ன? அந்தப் படங்களின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. பட்டாஸ்

கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பட்ஜெட் : ரூபாய் 60 கோடி
வசூல் : ரூபாய் 80 கோடி

  1. என்னை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில் ஒருவழியாக ரிலீசானது.

படத்தில் கௌதம் மேனன் வாய்ஸ் அதிக இடங்களில் இடம்பெற்றதே நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்தது.

பட்ஜெட் : ரூபாய் 30 கோடி
வசூல்: ரூபாய் 38 கோடி

துருவ நட்சத்திரம் படத்துக்கு என்னதான் பிரச்னை – வெளிவந்த புது அப்டேட்!

  1. அசுரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இப்படம் டைட்டிலுக்கு ஏற்றாற் போலவே வசூலில் அசுர வேகத்தில் ஆட்டம் போட்டது. மாபெரும் வெற்றியையும் பெற்றது.

பட்ஜெட் : ரூபாய் 75 கோடி
வசூல் : ரூபாய் 153 கோடி

  1. மாரி 2

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டெவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியானது.

ஆனால் முதல் பாகம் பெற்ற வெற்றியை இரண்டாம் பாகம் பெறவில்லை.

பட்ஜெட் : ரூபாய் 40 கோடி.
வசூல் : ரூபாய் 43 கோடி

  1. வட சென்னை

இந்த படத்தையும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஒட்டுமொத்த நடிகர்களின் யதார்த்தமான நடிப்பால் இப்படம் நல்லதொரு வெற்றியை கொடுத்தது.

பட்ஜெட் : ரூபாய் 65 கோடி
வசூல் : ரூபாய் 120 கோடி120 கோடி

இந்த ஐந்து படங்களில் அசுரன் மற்றும் வடசென்னை ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தன.

பட்டாஸ் திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்தது.

ஆனால் மாரி2, என்னை நோக்கி பாயும் தோட்டா ஐயர் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.