நடிகர் தனுஷின் புதிய வீட்டில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்து படிப்படியாக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் தனுஷ் போயஸ் கார்டனில் கட்டிய பிரமாண்ட வீட்டிற்கு குடி போனார். இந்த நிலையில் தற்போது இந்த வீட்டின் உட்புறம் எப்படி இருக்கும் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பது குறித்த தனுஷின் ஹோம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CpEVhXiJ2-m/?igshid=YmMyMTA2M2Y=

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.