ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush in Harish Kalyan Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் இவரை தேடி பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் எலன் இயக்கத்தில் பல நடிகர்களின் கெட்டப்பில் இவர் நடிக்க இருந்த திரைப்படம் தான் ஸ்டார். ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இரந்து தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.