Dhanush in D43 Movie Pooja

தனுஷின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Dhanush in D43 Movie Pooja : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அசுரன், என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் முடிந்த நிலையில் பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து முடித்தார்.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படமான D43 என்ற திரைப்படத்தில் நடிப்பதாகவும் இதனை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்ற நிலையில் தனுஷ், மாளவிகா மோகனன், ஜிவி பிரகாஷ், கார்த்திக் நரேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.