Aayirathil Oruvan 2

தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Dhanush in Aayirathil Oruvan 2 : தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வெற்றிபற்ற திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் வருடத்தில் வெளியாகும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.