
மலையாள நடிகையும் தனுஷின் மரியான் பட நாயகியான பார்வதி தனக்கு பட வாய்ப்புகள் வரல பாலியல் வாய்ப்புகள் தான் வருகிறது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் பல ஹிட்டான படங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி. இவர் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் மலையாள சினிமாவில் நடிகர்களை கடவுளாக பார்க்கிறார்கள். மேலும் ரசிகர் மன்றங்கள் குண்டர் மன்றங்களாக மாறியுள்ளன.
திலீப்புக்கு எதிராக நானும் சில நடிகைகளும் இணைந்து குரல் கொடுத்து வருவதால் கடந்த ஒரு வருடமாக எங்களுக்கு எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ரசிகர்களிடமிருந்து கொலை, பாலியல் மிரட்டல்கள் தான் வருகின்றன. இதனால் நாங்கள் பயந்து போயுள்ளோம்.
நான் பல ஹிட்டான படங்களில் நடித்திருந்தாலும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் எனக்கும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். பார்வதியின் இந்த பேச்சு மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.