Karnan Shooting Spot
நடிகர் யோகி பாபுவுக்கு தனுஷ் கொடுத்த திருமண கிப்ட் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Dhanush Gift for Yogi Babu Marriage : தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். தற்போது கர்ணன் படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதனால் படக்குழுவினர் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி யோகி பாபுவுக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளனர். நடிகர் தனுஷ் வாழ்த்து கூறி தங்க சங்கிலி ஒன்றை கிப்ட்டாக அளித்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தங்க சங்கிலியை கிப்ட்டாக அளித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் போக்கே கொடுத்து வாழ்த்திட்டு போற நடிகர்களுக்கு மத்தியில் இப்படியெல்லாம் கிப்ட் கொடுக்க ஒரு மனசு வேணும் என மகிழ்ச்சியுடன் கூறி கொள்கின்றனர்.

Dhanush Gift to Yogi Babu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.